search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவேந்தல் கூட்டம்"

    திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. #KarunanidhiCondolenceMeeting
    சென்னை:

    திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி வயோதிகம் காரணமாக சென்னையில் காலமானார்.
     
    அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் நினைவஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், ஆந்திரா மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KarunanidhiCondolenceMeeting
    சென்னையில் நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், சுப்பிரமணிய சாமி ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #BJP #AmitShah #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில், அமித் ஷா கலந்து கொள்ள உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், “திமுக கூட்டத்தில் கட்சி தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து அறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ட்வீட் செய்துள்ளார்.

    அமித் ஷா பங்கேற்கவில்லை என்றால் அக்கட்சி சார்பாக பொன் ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #DMK #BJP #AmitShah #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    திமுக முன்னாள் எம்.பி டி.ஆர் பாலு ஸ்டாலின் சார்பாக அமித் ஷாவை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.



    சென்னை பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×